நீ வருவாயென
நிமிடங்களும் வருடங்களாக
காத்திருக்கிறேன் நான்!
காதலர்களின் கண்களும்
பேசிக்கொள்ளும் --
என்றபோது நம்பவில்லை...!
ஆனால் --
உன் கண்களை சந்தித்த வேளையிலே
ஆயிரம் உணர வைத்தாய்...!
கண்களுக்கு எத்தனை சக்தி உண்டு --
தெரியவில்லை!
ஆனால் --
உன் கண்களை பார்க்கும் வேளையிலே
வேறெதுவும் தேவையில்லை...!
காதல் இனிக்கிறது!
காதல் பைத்தியம்
மோசமாய் கசக்கிறது...!
உன்னுடன் இருக்கும்போது
எல்லாம் சுகமானது...!
உன்னைப்பற்றி நினைப்பது கூட
எத்தனை ஆனந்தம் தெரியுமா....!
விழித்த நொடி கூட
மனம் உன்னைத்தான் தேடுகிறது....!
உண்ணும்பொழுதும் உறங்கும்பொழுதும்
எண்ணமெல்லாம் உன்னைச்சுற்றியே வட்டமிடுகிறது!
நல்லதானாலும் கேட்டதானாலும்
-
உன்னிடம் உரைக்கவே மனம் துடிக்கிறது...!
எங்கு சென்றாலும் --
உன் அருகாமை வேண்டுமென ஏங்குகிறது...!
மனம் வருந்தினாலும் --
அழுவதற்கு உன் மடி தேடுகிறது...!
நீயிருந்தால் தான் -
நான் உயிர் வாழ்வேன் என்றில்லை!
நீயில்லையென்றாலும் --
நான் வாழ்வேன்!
ஆனால் --
உன்னோடு நானிருந்தால் -
உலகமே எனக்கு
சொந்தமென மகிழ்வேன்...!
நீயில்லையென்றாலும்
சிரித்துக்கொண்டு தான் இருக்கிறேன்!
ஆனால் --
அது வெறுமையானது என்று
எனக்கு மட்டும் தானே புரியும்...!
உன்னோடு
கோயிலுக்குச் சென்றபோது
இறைவனும் நம்மைக்கண்டு
மயங்கி நிற்கின்றான் என்றேன்...!
இப்பொழுதும்
கோயிலுக்குச் செல்கிறேன்...!
என் கண்ணீரைக்கண்டு
இயலாமையால் --
சிலையாய் நிற்கின்றானோ
என்று தோன்றுகிறது...!
உன்னைப் பார்க்காத நாளில்லை
-
பேசாத வார்த்தையில்லை -
என்றிருந்தேன்...!
சிரித்தபோதும் நீயிருந்தாய்!
அழுதபோதும் ஆறுதலாய் -
நீதானே இருந்தாய்...!
நீ அருகில் இருந்தபோது
துன்பங்களையும்
துயரங்களையும் கூட
உணர்த்தில்லையே...!
இன்று --
அவற்றைத்தவிர உணர்வதற்கு
வேறொன்றும் இல்லையே...!
இப்பொழுதும் கூட
சந்தோஷத்திலும் துக்கத்திலும்
என் மனம்
உன்னைத்தான் தேடுகிறது....!
நீயும் என்னுடனே
இன்றும் இருக்கிறாய் --
கனவுகளில்...!
சிரித்தபோது
என்னைக்கண்டு பூரிக்கவும் --
அழுதபோது
ஆறுதலாய் தோள் கொடுக்கவும் --
நடக்கையில்
கைப்பிடித்து வழிகாட்டவும் --
இன்றும் நீ
என்னுடனே இருக்கிறாய்....!
[Written 13-Dec-03]