கண்டதும் காதல்
என்றனர் -
பைத்தியம் என்றேன் நான்!
சிலநாள் உடனிருந்ததில்
பிறந்தது என்றனர் -
அது நட்பென்றேன் நான்!
பலநாள் சந்தித்து
தெளிந்தேன் என்றனர் -
இத்தனை காலம் உணராமல், இன்று மட்டும் ஏனென்றேன்
நான்!
அத்தனையும் விளக்கத்
தெரிந்திருந்த நான் -
இன்று எனக்கே புரியாத புதிராய்!
என்னுள் தான் எத்தனை
மாற்றங்கள் -
பல ஏமாற்றங்களுக்குப் பின்னும்!
நானிருக்கும் நிலையென்ன?
கொண்ட மாற்றம் தான் என்ன?
தனிமையில் யோசித்தேன் -
இன்று தனிமையை ரசிக்கிறேன்!
ஏனிந்த மாற்றம்
?
எந்த வகையில் மாற்றம்?
இல்லை, எப்பொழுது
தான் மாறினேன்!
பாஷை புரிந்தாலும் -
சில வார்த்தைகள்
மட்டும் -
இன்னும் புரியாத
புதிராய்!
மற்றவர் சொன்னபோதெல்லாம்
மாயையென்று சிரித்தேன்!
இனி, என்னைக்கண்டும் பலர் சிரிப்பார்!
யாரும் சொன்னபோதும்
நம்பவில்லை -
இன்று உணர்கிறேன்...
தனிமை எத்தனை சுகமென்று!
தனிமை குளிர்கின்றது...
சுடவும் செய்கின்றது...!
தனிமையில் சென்று
சிரிக்கிறேன் -
அழவும் செய்கின்றேன்...!
தானாய் சிரித்தவர்களை
முட்டாள் என்றேன் -
இப்போதெல்லாம்,
பாதிநேரம் சிரிக்க மட்டுமே செய்கிறேன் --
-- மீதி நேரம் அழவும் செய்கிறேன்...!
நீயின்றி நானில்லை
என்று -
உரக்கக்கூறத் துடிக்கிறேன் நான்!
நீயும் அவனும் சேர்வதெ
இல்லையென்று -
எப்பொழுதோ எழுதிவிட்டான் அவன்!
[தொடரும்...]
No comments:
Post a Comment