Wednesday, 7 June 2017

கண்டதும் காதல் - 2

உறக்கத்தைக் கொடுத்து
    அதில் நல்ல கனவைக் கொடுத்து
அதைக் கெடுக்க
    பகலையும் கொடுத்துவிட்டான்...!

இரவானாலும் பகலானாலும் -
    என் மனம் மட்டும்
உன்னை  உரைத்துக்கொண்டேயிருக்கும் -
    மரணம் அதைத் தீண்டும் வரை...!

நீயும் அவனும் சேர்வதில்லை
    என்று தானே சொல்லமுடியும்...!
நினைவுகளையும் அழித்துவிடு
   என்றுரைக்க அவனாலேயே முடியவில்லையே...!  

வாழ்க்கையின் ஒரு
     அத்தியாயமாய் மட்டுமே நீ வந்தாய்!
வராமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கக்கூட
    மனம் துணியவில்லை -
எல்லா பக்கங்களிலும் இணைத்துப்பார்க்க மட்டும்
    ஏனோ துடிக்கிறது...!

நீயிருந்தால் -
    சொந்தம் இருக்கவில்லை...!
சொந்தமிருக்கும்பொழுது -
   நீ இங்கில்லை...!
சொந்தமும் நீயும்
    சேர்ந்திருக்க மட்டும் -
ஏனோ யாரும் நினைக்கவில்லை...!

கண்டதும் காதலில்லை!
    சிலநாள் பழகியபோதும் தெரியவில்லை....!
நீ என்னைக்கு காதலிக்கிறான் என்றபோது கூட
    வெறுமையாய்த்தானே சிரித்தேன்...

நீ இல்லாத நேரங்களில் -
    ஏங்கித் தவித்தபோதும் உணரவில்லை...!
நேற்றோ...! இன்றோ...!
     என்று உணர்ந்தேன் இத்தனையும்...!

சொல்லி வருவதில்லை -
    நீ சொல்லியும் எனக்கு வரவில்லை...!
கண்டு மலர்வதில்லை -
    உனைக்கண்டதால் மட்டுமே மலரவில்லை...!


[வார்த்தைகள் தொய்ந்து போனாலும் உணர்வுகள் தொடரும்...]

No comments:

Post a Comment