வழிமேல் விழிவைத்து
காத்திருந்தேன் என்பர்!
என் விழியோ --
தொலைபேசி மீதே
பாதிநேரமும்!
மீதி நேரம் கூட --
உன் நினைவாய்த்தானே...!
வந்து விடு கண்ணா!
உனக்கே உனக்காய் --
என்று
தானே நானிருக்கிறேன்!
எனக்காய் நீயில்லை என்கிறாயே...!
வந்து விடு கண்ணா!
நீயில்லையேல் இனி --
நானில்லை என்றாய்...!
உன் வார்த்தை நெருப்பாய் --
மெழுகாய்
உருக்கினாய்...!
உனக்காய் இன்று நான்
உருகி நிற்கிறேன்...!
என்னை விட்டு நீ --
விலகி நிற்பது
மட்டும் ஏனடா...!
வேண்டாம் என்றிருந்தேன்!
நீயே வேண்டும்
--
என இரந்து நின்றாய்...!
ஊருக்கு பயந்தேன்!
நீ
உண்மையாய் இரு --
என்று அடக்கினாய்...!
இன்று நான் --
உனக்காய்
உண்மையாய்
காத்திருக்க --
நீ
ஏனோ இங்கில்லையே ...!!
சோதிக்கும் திட்டமா...?
இல்லை --
என்மேல் இல்லை நாட்டமா...?
இனி --
காத்திருப்பதே என்
கடமையா...?
இல்லையடா!
காத்திருப்பது கொடுமை...!
உனக்காய் இருக்கும்
கடைசி நிமிடங்களாவது
--
எனக்காய் தருவாயா?
No comments:
Post a Comment