Wednesday, 7 June 2017

kirukkals.com

Love is an acid!
When you would make
    good products out of it,
I had only known
    to burn my hands with it...!

Love what you feel...!

I've never loved -
    to hate my feelings!
Nor have I hated -
    to love my feelings...! :)

கண்டதும் காதல் - 2

உறக்கத்தைக் கொடுத்து
    அதில் நல்ல கனவைக் கொடுத்து
அதைக் கெடுக்க
    பகலையும் கொடுத்துவிட்டான்...!

இரவானாலும் பகலானாலும் -
    என் மனம் மட்டும்
உன்னை  உரைத்துக்கொண்டேயிருக்கும் -
    மரணம் அதைத் தீண்டும் வரை...!

நீயும் அவனும் சேர்வதில்லை
    என்று தானே சொல்லமுடியும்...!
நினைவுகளையும் அழித்துவிடு
   என்றுரைக்க அவனாலேயே முடியவில்லையே...!  

வாழ்க்கையின் ஒரு
     அத்தியாயமாய் மட்டுமே நீ வந்தாய்!
வராமலே இருந்திருக்கலாம் என்று நினைக்கக்கூட
    மனம் துணியவில்லை -
எல்லா பக்கங்களிலும் இணைத்துப்பார்க்க மட்டும்
    ஏனோ துடிக்கிறது...!

நீயிருந்தால் -
    சொந்தம் இருக்கவில்லை...!
சொந்தமிருக்கும்பொழுது -
   நீ இங்கில்லை...!
சொந்தமும் நீயும்
    சேர்ந்திருக்க மட்டும் -
ஏனோ யாரும் நினைக்கவில்லை...!

கண்டதும் காதலில்லை!
    சிலநாள் பழகியபோதும் தெரியவில்லை....!
நீ என்னைக்கு காதலிக்கிறான் என்றபோது கூட
    வெறுமையாய்த்தானே சிரித்தேன்...

நீ இல்லாத நேரங்களில் -
    ஏங்கித் தவித்தபோதும் உணரவில்லை...!
நேற்றோ...! இன்றோ...!
     என்று உணர்ந்தேன் இத்தனையும்...!

சொல்லி வருவதில்லை -
    நீ சொல்லியும் எனக்கு வரவில்லை...!
கண்டு மலர்வதில்லை -
    உனைக்கண்டதால் மட்டுமே மலரவில்லை...!


[வார்த்தைகள் தொய்ந்து போனாலும் உணர்வுகள் தொடரும்...]

Monday, 5 June 2017

கண்டதும் காதல்!

கண்டதும் காதல் என்றனர் -
    பைத்தியம் என்றேன் நான்!
சிலநாள் உடனிருந்ததில் பிறந்தது என்றனர் -
    அது நட்பென்றேன் நான்!
பலநாள் சந்தித்து தெளிந்தேன் என்றனர் -
    இத்தனை காலம் உணராமல், இன்று மட்டும் ஏனென்றேன் நான்!
அத்தனையும் விளக்கத் தெரிந்திருந்த நான் -
    இன்று எனக்கே புரியாத புதிராய்!

என்னுள் தான் எத்தனை மாற்றங்கள் -
    பல ஏமாற்றங்களுக்குப் பின்னும்!

நானிருக்கும் நிலையென்ன?
    கொண்ட மாற்றம் தான் என்ன?
தனிமையில் யோசித்தேன் - 
    இன்று தனிமையை ரசிக்கிறேன்!

ஏனிந்த மாற்றம் ?
    எந்த வகையில் மாற்றம்?
இல்லை, எப்பொழுது தான் மாறினேன்!

பாஷை புரிந்தாலும் - 
    சில  வார்த்தைகள் மட்டும் -
இன்னும் புரியாத புதிராய்!

மற்றவர் சொன்னபோதெல்லாம்
    மாயையென்று சிரித்தேன்!
 இனி, என்னைக்கண்டும் பலர் சிரிப்பார்!

யாரும் சொன்னபோதும் நம்பவில்லை  -
இன்று உணர்கிறேன்...
தனிமை எத்தனை சுகமென்று!
 தனிமை குளிர்கின்றது...
    சுடவும் செய்கின்றது...!
தனிமையில் சென்று சிரிக்கிறேன் -
    அழவும் செய்கின்றேன்...!

தானாய் சிரித்தவர்களை
    முட்டாள் என்றேன் -
இப்போதெல்லாம்,
   பாதிநேரம் சிரிக்க மட்டுமே செய்கிறேன் --
    -- மீதி நேரம் அழவும் செய்கிறேன்...!
  
நீயின்றி நானில்லை என்று -
    உரக்கக்கூறத் துடிக்கிறேன் நான்!
நீயும் அவனும் சேர்வதெ இல்லையென்று -
    எப்பொழுதோ எழுதிவிட்டான் அவன்!

[தொடரும்...]